தம்பிக்காக ‘சவரக்கத்தி’ படத்தை தயாரித்த டைரக்டர் மிஸ்கின் அடுத்து தான் இயக்கப் போகும் புதிய படத்துக்கு தயாராகி விட்டார்.
விஷாலை வைத்து ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கியவர் அடுத்து அவர் எந்த முன்னணி ஹீரோவுடன் கூட்டணி அமைப்பார்? என்கிற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அவரோ யாருமே எதிர்பார்க்காத ஒரு புதிய கூட்டணியை அமைத்து வியக்க வைத்திருக்கிறார்.
மிஸ்கின் இயக்கப் போகும் இந்த புதிய படத்தை ‘நளனும் நந்தினியும்’, ‘சுட்டக்கதை’, ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ ஆகிய படங்களைத் தயாரித்த லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறதாம்.
இப்படத்தில் ஹீரோவாக சாந்தனு நடிக்கிறார். படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
முன்னணி ஹீரோவாக ஆசைப்பட்டு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் சாந்தனுவுக்கு மிஸ்கின் கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பு அவருடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று உறுதியாகச் சொல்லலாம்.