சிம்பு திருந்தணும்னா இது ஒண்ணு தான் வழியாம்…!

சிம்புவும், அனிருத்தும் சேர்ந்து செய்த தரங்கெட்டசெயலான ‘பீப் சாங்’ இளையராஜாவை ‘அறிவிருக்கிறதா..?’ என்று ஒரு நிருபரைப் பார்த்து கோபத்தோடு கேட்கிற அளவுக்கு சீரியஸ் ஸ்டேஜுக்கு கொண்டு போய் விட்டு விட்டது.

கனடாவுக்கு இசை நிகழ்ச்சிக்குப் போயிருந்த அனிருத் தமிழக போலீசாரின் கைதுக்கு பயந்து அங்கேயே தங்கி விட, இது என் தனி மனித சுதந்திரம், நான் சட்டத்துக்கு கட்டுப்பட்டவன், சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே கைதுக்கு பயந்து ஒளிந்து கொண்டிருக்கிறார் சிம்பு.

இதற்கிடையே தானாக தூண்டிலில் மாட்டிக்கொண்ட மீன் போல இப்படி ஒரு தருதலைப்பிள்ளையை பெற்று விட்ட பாவத்துக்காக தனக்குத் தெரிந்த பெரிய கைகளை எல்லாம் சந்தித்து எப்படியாவது மகனை ஜெயிலுக்கு போக விடாமல் என்னவெல்லாம் செய்ய முடியுமோ? அதையெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு செய்து கொண்டிருக்கிறார் அப்பா டி.ஆர்.

இருந்தாலும் இது தற்காலிகத் தீர்வாக மட்டுமே இருக்கும் என்பதால் தனிமையில் இருக்கும் சிம்புவுக்கு ஒரு கால் கட்டு போட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று அவரது குடும்பத்தார் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.

ஆமாம் இனியும் காலம் தாழ்த்தாமல் சிம்புவுக்கு திருமணம் செய்து வைப்பது தான் நலம் என்று சிம்புவின் குடும்ப ஜோசியர் ஒரு அறிவுரை கூறியிருக்கிறார். இதனால்

அவருடைய குடும்பத்தார், சொந்தங்களின் வற்புறுத்தலின் பேரில் விரைவிலேயே சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

வருகிற நடிகைகளையெல்லாம் தன்னுடைய காதல் வலையில் விழ வைத்து சிம்புவுக்கு சொந்தத்தில் பெண் கிடைத்தாலே ஆச்சரியம் தான் என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாராம்.

Actor Simbu MarraigeAniruthBeep SongSimbu
Comments (0)
Add Comment