அப்படிப்பட்ட திரை நட்சத்திரங்களுக்கு மத்தியில் தனது புது மனைவி தமன்னாவோடு தனக்குப் பிடித்த நடிகரான தே.மு.தி.க. தலைவரும், தமிழ் சினிமாவின் கேப்டனுமானா விஜயகாந்த்தை நேரில் சந்தித்து ஆசி வாங்கி விட்டு வந்திருக்கிறார் இளம் ஹீரோவான செளந்தரராஜா.
இதுபற்றி நடிகர் சௌந்தர ராஜா கூறுகையில் ”தமிழ்சினிமாவின் மிக அற்புதமான மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். சக மனிதரிடத்திலும் சினிமா குடும்பத்தினரிடமும் கேப்டன் அவர்கள் காட்டும் அன்பில் அவர் மிக உயர்ந்த மனிதர்.
அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டவரிடம் நானும் என் மனைவியும் வாழ்த்துப் பெற்றதை பெருமிதமாக உணர்கிறேன். எங்கள் சந்திப்புகளை நினைவுகூர்ந்து என்னையும் என் மனைவியையும் அன்போடு வாழ்த்திய புரட்சிக்கலைஞருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.