”திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க..” – எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த ஹீரோ!

மீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி நடைபெற்ற அறப் போராட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ் இது ”இராணுவமே வந்தாலும் எதிர்கொள்ள தயங்காத கூட்டம்” என்றார்.

அதனை தொடர்ந்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்ட அன்றும் ”தமிழர்கள் நாங்கள் இராணுவமே வந்தாலும் அதை எதிர் கொள்ள தயங்க மாட்டோம்” என்று கோஷமிட்டனர்.

இதில் பாரதிராஜா, அமீர், வ. கௌதமன், வெற்றிமாறன், ஆர்.கே. செல்வமணி, தங்கர் பச்சான் ஆகியரோடு நடிகர் ஆரியும், சௌந்தர் ராஜாவும் கலந்து கொண்டார்கள்.

இந்த உரிமைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் விதமாக சௌந்தர்ராஜா காவல்துறையினர் மத்தியில் கைகூப்பி கொண்டிருந்த போட்டோவை வைத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ”இதுதான் ராணுவத்திற்கே அஞ்சாத கூட்டம்” என கிண்டல் செய்து உள்ளார்.

அதற்கு பதிலளித்த சௌந்தர்ராஜா ராஜா இந்த போட்டோ ஜல்லிக்கட்டிற்காக மெரீனா கடற்கரையில் குழந்தைகளையும் பெண்களையும் அடிக்க வேண்டாமென்று கேட்டு கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், உங்க திறமையைக் கண்டு வியக்கிறேன். எங்களுக்கு வன்முறை வேண்டாமென்று அமைதியாக உள்ளோம். திரும்ப அடிக்க தெரியாமல் அல்ல.. வாழ்க ஜனநாயகம்!’ என்று ஹரி ஹர ராஜா சர்மாவை டேக் செய்து பதிலடி கொடுத்திருக்கிறார்.

வாங்கிக் கட்டிக்கிறதே ராஜாவுக்கு முழுநேர வேலை!

Actor SoundararajaCauvery issuecauvery protestsh rajaSoundararaja
Comments (0)
Add Comment