உங்கள் அன்பு தான் என்னை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது! : சூர்யா நெகிழ்ச்சி

ஸந்த் இயக்கிய ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் 1997-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் சூர்யா.

தொடர்ந்து சில தோல்விகள், பல வெற்றிகள் என இரண்டையும் பார்த்து முன்னணி நாயகனாக வலம் வரும் அவர் தமிழ்சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து சூர்யா பேசியிருப்பதாவது :

”என்னுடைய கடந்த 20 வருட சினிமா வாழ்க்கை என்பது சாதிக்காததை சாதிக்க வேண்டும் என்பது தான்.

உங்களுடைய கரகோஷங்கள் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தந்தது உங்களுடைய பாராட்டுக்கள். உங்கள் விமர்சனம் இன்னும் சிறப்பாக நான் கற்றுக்கொள்ள உதவியது. உங்கள் ஆதரவு, சினிமாவைத் தாண்டி என்னை செல்ல வைத்தது (அகரம் அறக்கட்டளை).

இதையெல்லாம் விட. உங்கள் அன்பு, இன்னும் இந்த இயந்திரத்தை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த 20 வருட பயணத்துக்கும், இனி பயணிக்க போகும் பல மைல் தூரத்துக்கும் உங்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். அனைவருக்கும் நன்றி”

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

20 Years Of SURIYAismActor SuriyaSuriya
Comments (0)
Add Comment