தேசிய விருதுகளை குவித்த இந்திப்பட ரீமேக்கில் பிரசாந்த்!

‘ஜானி’ படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்கத் தயாராகி விட்டார் பிரசாந்த்.

இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்து, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்ற ‘அந்தாதுன்’ என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரசாந்த்.

சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவனின் ‘ஜானி கத்தார்’ படத்தை ‘ஜானி’ என்ற பெயரில் பிரஷாந்த் நாயகனாக நடிக்க தமிழில் ரீமேக் செய்திருந்தார். அதைத்தொடர்ந்து இந்தப் படத்தையும் தமிழில் ரீமேக் செய்கிறார் தியாகராஜன்.

இது குறித்து தியாகராஜனிடம் கேட்டபோது, ‘அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும்’ என்றார்.

தமிழ்மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் இயக்குனர், பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படக்குழு முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பு துவங்கும்” என்றார்.

Movie NewsPrashanthThiagarajan
Comments (0)
Add Comment