‘ஆவிகுமார்’ வருதுல்ல, அப்புறம் பாருங்க… : உதயா செம ஹேப்பி

திறமையான வாரிசு நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் உதயா. அப்பா ஏ.எல்.அழகப்பன் பிரபல தயாரிப்பாளர், தம்பி ஏ.எல்.விஜய் பிஸியான இயக்குநர் பில்டிங் ரொம்ப ஸ்ட்ராங்க்காக இருந்தாலும் இன்றைக்கும் தனக்கான இடத்தைப் பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார்.

அவருடைய உண்மையான உழைப்புக்கு நிச்சயமான பலனைத் தரும் படமாக தயாராகியிருக்கிறது ஆவிகுமார். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ரிலீசாகப் போகும் ஆவிகுமார் எனது சினிமா கேரியரில் முக்கியமான படம் என்றார் உதயா.

நான் சினிமாவுக்கு வந்து பதினைஞ்சு வருஷமாயிடுச்சு. இதுவரைக்கும் 18 படங்கள் நடிச்சிருக்கேன். ஆனா ரிலீசானது சுமாரா 10 படங்கள் இருக்கும். இருந்தாலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கணும்னு நெனைச்சப்பத்தான் ‘ஆவிகுமார்’ படத்தோட கதையைக் கேட்டேன்.

என்னோட கேரியரை அடுத்த லெவலுக்கு கொண்டு போற படமா இது இருக்கும். இது ஒரு பேய் சீஸனுக்கான படமா மட்டும் இருக்காது.

அதையும் தாண்டி பேமிலியோட உட்கார்ந்து பார்க்கிற மாதிரி புல் எண்டர்டெயின்மெண்ட்டா இருக்கும். இதுவரைக்கும் என்னோட படங்களுக்கு அதிகபட்சமா 100 தியேட்டர்கள் வரைதான் ரிலீசாகியிருக்கு.

ஆனால் ஆவிகுமார் படத்தை 170 தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்றாங்க. இது எனக்கு மிகப்பெரிய விஷயம் அதுக்காக என்னோட தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவிச்சுக்கிறேன் என்றவரிடம் இவ்ளோ தூரத்துக்கு ஆவிகுமாரை நம்பியிருக்கிற உங்களை படத்தோட பப்ளிசிட்டி விளம்பரங்கள்ல ஏன் உங்களை இருட்டடிப்பு செய்றாங்க என்றோம்.

அதை நானும் தயாரிப்பாளர்கள் கிட்ட கேட்டேன். இப்போ பேய் பட சீஸன்ங்கிறதுனால ஹீரோயினை மட்டுமே போகஸ் பண்ணி விளம்பரம் பண்றோம். அது படத்தோட பிஸ்னஸுக்கு ரொம்ப உதவியா இருக்கும்னு சொன்னாங்க. சரி நானும் அதை ஏன் பிரச்சனையாக்கணும்னு விட்டுட்டேன். என்கிறார் பெருந்தன்மையாக…

இந்த நல்ல மனசுக்கே படம் வசூலை அள்ளட்டும்!

Aavi KumarActor Udhaya
Comments (0)
Add Comment