சொகுசு கார் விபத்தில் பலி : ஆட்டோ ஓட்டுநர் மகளின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்!

மிழகம் எதில் முன்னேறுகிறதோ இல்லையோ மதுபழக்கத்தில் முதலிடத்தை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டுமென்று மக்களின் உயிர்மீது பெரும் பொறுப்பை காட்டும் நீதிபதிகள் மது விஷயத்தில் மட்டும் அது அரசின் கொள்கை முடிவு, நாங்கள் தலையிட முடியாதென்று ஒதுங்கி விடுகின்றனர்.

விளைவு இன்றைக்கு பெரும் செல்வாக்கு மிக்கவர்களே மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உயிரிழப்பை ஏற்படுத்துகிற அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

சில வாரங்களுக்கு முன்பு தான் நடிகர் அருண்விஜய் குடிபோதையில் நூங்கம்பாக்கம் போலீஸ் வேனில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

அந்த பரபரப்பே அடங்காத நிலையில் சில தினங்களுக்கு முன்பு சொகுசு கார் விபத்து ஒரு ஒரு ஆட்டோ டிரைவரின் உயிரைப் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் மைலாப்பூரில் அதிகாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதியதில் 13 ஆட்டோக்கள் சேதம் அடைந்தது அதில் ஆடோக்களில் ஒய்வு எடுத்துக் கொண்டு இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர்.

இச்சம்பவத்தில் 9 ஆட்டோ ஓட்டுனர்கள் படுகாயம் அடைந்தார்கள். அவர்களில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுக்கா, அக்குர் கிராமத்தை சேர்ந்த 29 வயதான ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்செய்தியை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளரும் நடிகருமான விஷால் அவர்கள் அவருடைய குடும்பத்தை தொடர்பு கொண்டு பேசியபோது ஆறுமுகத்திற்கு மணிஷா (வயது-7) என்ற மகள் இருப்பதை அறிந்தார்.

உடனே மணிஷாவின் கல்விச் செலவை தனது தேவி அறக்கட்டளை பொறுப்பேற்று கொள்வதாக கூறி குடும்பத்தினருக்கு சமாதானம் தெரிவித்தார்.

Actor VishalTasmacvishal
Comments (0)
Add Comment