ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்!

ஜோக்கர், அருவி, காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம், NGK போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்த புதிய படத்தின் படபிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் ஆரம்பமாகியது.

‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ என வித்தியாசமான கதையமைப்பில் வெற்றிப்படங்களை டைரக்ட் செய்தவர்,நெல்சன் வெங்கடேசன். மீண்டும் ஒரு புதிய கதை வடியமைப்பில் இப்புதிய படத்தை டைரக்ட் செய்கிறார். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற்று வரும் இவருக்கு இப்படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக அமைதுள்ளது. மேலும், ‘ஜித்தன்’ரமேஷ், கிட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

Actor JithanRameshActress Aishwarya Rajeshdirector Nelson VenkatesanDreamWarriorPictures