மவுசு குறைந்தார் ஐஸ்வர்யா ராய்! : வசூலில் முந்தினார் அனுஷ்கா!!

மிழில் இன்று தான் ‘ருத்ரமா தேவி’ ரிலீசாகிறது.

தெலுங்கிலோ சென்ற வாரமே ரிலீசாகி விட்டது. ரிலீசான வேகத்தில் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘ருத்ரமா தேவி’யின் தெலுங்கு பதிப்பு ரிலீசான அதே நாளில் தான் பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஜஸ்பா’ திரைப்படம் ரிலீசானது.

அபிஷேக் பச்சனை திருமணம் செய்த கையோடு நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்த ஐஸ்வர்யாராய் 5 வருடங்களுக்குப் பிறகு நடித்த படமென்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது அந்த எதிர்பார்ப்பு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. சொல்லப்போனால் ஐஸ்வர்யா ராய்க்கு ரசிகர்களிடையே மவுசு குறைந்து விட்டது என்று கூட சொல்லலாம்.

ஆமா, கடந்த வெள்ளியன்று ரிலீசான இந்த இரண்டு படங்களில் ரிலீஸ் தேதியன்று ‘ருத்ரமா தேவி’  11 கோடியை வசூல் செய்திருக்கிறது. நேற்றுவரை 25 கோடியை நெருங்கி விட்டது. ஆனால் ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஜஸ்பா’ திரைப்படமோ முதல்நாளில் 4.25 கோடியையும் நேற்றுவரை 2.5 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

அந்த வகையில் அனுஷ்காவின் ‘ருத்ரமாதேவி’ தான் வசூலில் முன்னணியில் இருக்கிறது.

Aishwarya Raianushka
Comments (0)
Add Comment