நடிகை தீப்ஷிகாவை தேடிவந்த பிரபலத்தின் பாராட்டு !

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் ஐம்பது அறிமுக கதாநாயகிகளாவது வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்த படிகளில் ஏறி செல்பவர்கள் மிகவும் குறைவே.. ஆனால் ஒருசில நடிகைகள் மட்டும் ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆகி சட்டென ஒரு புகழ் வெளிச்சத்திற்குள் வந்து விடுவார்கள்.. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் அறிமுக நடிகையாக களம் இறங்கியுள்ள அக்மார்க் தமிழ்பொண்ணு தீப்ஷிகா.

அந்தவகையில் இந்த ஆல்பத்தில் இடம்பெறும் கேசாதிபாதம் என்கிற பாடலில் நடன ஆசிரியையாக நடித்துள்ளார் தீப்ஷிகா. ஒரு பெண்ணின் தலைமுதல் பாதம் வரை அவளது அவயங்களை ஒவ்வொன்றாக இயற்கையுடன் ஒப்பிட்டு வர்ணித்து இந்த பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து. இந்தப்பாடலை விஜய் நடித்த பைரவா படத்தை இயக்கிய இயக்குனர் பரதன் தான் இயக்கியுள்ளார்.

இந்தப்பாடலுக்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, கிட்டத்தட்ட அதை மறந்தே போயிருந்த சூழலில், திடீரென ஒருநாள் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது முதலில் தீப்ஷிகாவால் அதை நம்பத்தான் முடியவில்லை..ஆனால் அதன்பின் பேசுவது கவிப்பேரரசர் தான் என உணர்ந்ததும் எனக்கு பேச்சே வரவில்லை.. கேசாதிபாதம் பாடலில் நடித்துள்ள நான் அந்தப்பாடலுக்கே உயிர்கொடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக பாராட்டிய வைரமுத்து சார், தமிழ்சினிமாவில் உனக்கு நல்லதொரு இடம் காத்திருக்கிறது என வாழ்த்தினார்.. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான், அவராகவே அழைத்து வாழ்த்தும் அளவுக்கு எனது வேலையை சிறப்பாக செய்திருக்கிறேன் என்கிற மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்பட்டது” என சிலாகித்து பேசுகிறார் தீப்ஷிகா.

Actress DeepshikaVairamuthu