இனிமே இப்படித்தான்! – இனியா எடுத்த அதிரடி முடிவு

ற்குணம் இயக்கிய ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை இனியா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

ஆள் பார்ப்பதற்கு அழகாகவும் கும்மென்றும் இருப்பவருக்கு நன்றாக நடிக்கத் தெரிந்திருந்த போதிலும் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் வரவில்லை.

இதனால் கடைத் திறப்பு, வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடனம் ஆடுவது என சம்பாதித்து வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கிறார்.

நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னும் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராகவே இருக்கிறார். அதற்கு காரணம் அவர் படங்களில் கவர்ச்சியாக நடிப்பதில்லை. இதனால் தான் இயக்குனர்கள் அவரை ஒதுக்குகிறார்கள் என்று கோடம்பாக்கத்தில் சொல்லப்பட்டு வந்தது.

கவர்ச்சியாக நடித்தால் தான் சினிமாவில் தாக்குப் பிடிக்க முடியும் என்பதை தற்போது உணர்ந்து கொண்ட இனியா இனி படங்களில் கவர்ச்சியாக நடிப்பது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

இதற்காக சமீபத்தில் ஸ்பெஷல் போட்டோஷுட் ஒன்றை நடத்தி அதில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இயக்குனர்களின் பார்வைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இதன் மூலம் கோலிவுட்டில் இன்னொரு ரவுண்ட் வரலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார் இனியா.

இளமை போன பிறகு ஓட்டப்பந்தயமா?

actress iniyacinemaglamourIniyaஇனியாகிளாமர்சினிமா
Comments (0)
Add Comment