‘அட்ஜெஸ்மெண்ட் பண்ணுவீங்களா?’ : கேட்டவனை துரத்தியடித்த லட்சுமி ராமகிருஷ்ணன்

பிரபல நடிகை பாவனாவை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் மலையாள, தமிழ்த்திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் ”எனக்கும் ஒரு தனியார் டிவி சேனலில் பெரிய பொறுப்பில் இருப்பவர் பாலியல் தொல்லை கொடுத்தார்” என்று தனது ட்விட்டரிலேயே தைரியமாக கருத்துகளை வெளியிட்டார் நடிகை வரலட்சுமி.

இந்த இரு சமாச்சாரங்களின் பரபரப்பு அடங்குவதற்குள் பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா பிரபல நடிகர், நடிகைகளின் அந்தரங்கப் புகைப்படங்களையும், வீடியோக்களும் தனது ட்விட்டரில் வெளியிட்டு பரப்பைப் கிளப்பினார்.

இப்படி திரையுலகில் பாலியல் தொல்லைக் குறித்து பிரலங்கள் பலரும் தைரியமாக கருத்துகளை தெரிவித்து வருகிற நிலையில் பிரபல நடிகையும், ‘சொல்வதெல்லாம் உண்மை’ டிவி ஷோ புகழ் லட்சுமி ராமகிருஷ்ணனும் திரையுலகில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து அதிர்ச்சியான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது, ”நான் சினிமாவுக்கு வந்த நாளில் இருந்து பாலியல் பாகுபாட்டால் கேலிக்கும், கிண்டலுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகியுள்ளேன்.

முன்னணி மலையாள இயக்குனர் ஒருவர் (தமிழிலும் படம் எடுத்துள்ளார்) எனக்கு பாலியல் தொல்லைகள் தர முயன்றார். அதை நான் எதிர்த்தபோது படப்பிடிப்பு தளத்தில் என்னை அசிங்கப்படுத்தினார்.

படப்பிடிப்பு தளத்தில் தேவையில்லாமல் என்னை திட்டினார். நான் நன்றாக நடித்தாலும் சில காட்சிகளை 25 டேக் எடுக்க வைத்தார். அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் கூறியதால் நான் தான் அவதிப்பட்டேன் என கூறியுள்ளார்.

மேலும், அண்மையில் ஒரு இயக்குனர் அனுப்பி வைத்ததாக கூறி அவரின் உதவியாளர் வந்து என்னிடம் கதை சொன்னார். கதை சொல்லும்போதே அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி பேசினார். உட்னே அதிர்ந்து போய் அவரை வெளியே செல்லுமாறு கூறினேன் என்று ஆக்ரோஷமாக கூறியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இன்னும் எத்தனை பேர் இப்படியே கெளம்பி வர்றப்போறாங்களா?

Lakshmi RamakrishnanSexual HarassmentSolvathellam Unmai
Comments (0)
Add Comment