கரண் நடித்த ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில் புதிதாக வாங்கிய குத்துவிளக்காட்டம் அறிமுகமானார் மீனாட்சி.
அடுத்தடுத்து சில படங்களில் நடித்தும் ரிலீசான எந்தப்படமும் அவருடைய சினிமா கேரியருக்கு பலம் சேர்க்கவில்லை. இதனால் சான்ஸே இல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளில் வாய்ப்பு தேடி வந்தார். அங்கும் கதவுகள் அடைக்கப்பட மும்பைக்கு தன் வீட்டில் ஓய்வெடுக்கப் போனவர் தான்.
காக்கா முட்ட காக்கா முட்ட பாடலில் யானை போட்ட முட்டை சைசில் தான் ரசிகர்கள் பார்த்தார்கள். அந்தளவுக்கு கண்டதுகளையும் இரப்பைக்குள் இறக்கி பெருத்துப் போயிருந்தார்.
இருந்தாலும் அவருடைய அழகில் பெரிய சேதாரம் ஏற்படாததால் அவரை தங்கள் படங்களில் கதாநாயக்கி படமெடுத்து வருகிறார்கள்.
இதனால் வந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற அலர்ட் இல்லாமல் உதவி இயக்குநர் ஒருவருடன் சண்டைக்குப் போய் அது அவருக்கு பளார் விடுகிற அளவுக்கு வளர்ந்து விட்டது.
முரளி கிருஷ்ணா இயக்கி வரும் நேர்முகம் படத்தில் நடித்து வருகிறார் மீனாட்சி. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையிலுள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
படத்தில் வேலை செய்யும் உதவி இயக்குநர் சங்கர் என்பவர் கையை நீட்டி, முழக்கி ஏதோ சிரித்துக் கொண்டே பேசிக்கொண்டிருக்க, அவர் தன்னைத் தான் கிண்டல் செய்கிறார் என்று நினைத்து அவர் கன்னத்தில் பளார் விட்டு புண்ணாக்கி விட்டார்.
மீனாட்சியின் இந்த அத்துமீறலைப் பார்த்து மொத்த யூனிட்டும் அதிர்ச்சியில் உறைய அப்புட்டுத்தான் மொத்த யூனிட்டும் மீனாட்சியை ரவுண்டு கட்டி விட்டார்கள். பயந்து போய் கேரவனுக்குள் ஓடியவரை விடவில்லை யூனிட்.
டைரக்டர் தலைமையில் சமாதானம் பேச வெளியே வந்தவரை இழுத்துப் போட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். ஒருவழியாக அதிலிருந்து தப்பித்து மீண்டும் கேரவேனுக்குள் போய் ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி, அதை மீடியா முன் படித்துக் காட்டிவிட்டு தப்பித்திருக்கிறார்.
இப்போது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.
குரைக்க வேண்டிய இடத்துல குரைக்கணும், கடிச்சா இப்படித்தான் பதில் சேதாரமாகும்!