மாதவனுக்கு தமிழில் ரீ-எண்ட்ரி படமாக அமைந்தது ‘இறுதிச்சுற்று’ திரைப்படம். அதே படத்தில் நாயகியாக நடித்த ரித்திகா சிங்குக்கும் தமிழில் நல்ல எண்ட்ரியாக அமைந்தது. படத்தில் மாதவனை விட ரித்திகா சிங்கின் யதார்த்தமான நடிப்பைப் பார்த்து தான் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டித் தள்ளினர்.
படம் வெற்றி பெற்றதும் தமிழில் அடுத்தடுத்து படங்கள் ரித்திகா சிங்குக்கு கமிட்டாக ஆரம்பித்தது. இருந்தாலும் தேடி வருகிற எல்லாப் படங்களையும் வாங்கி போட்டுக் கொள்ளாமல் நல்ல கதையம்சமுள்ள படங்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
அந்த வகையில் காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
நடிப்பைப் பொறுத்தவரை ரித்திகா சிங்கால் இயக்குநர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றாலும் கதை கேட்பதில் ஆரம்பித்து படப்பிடிப்பில் மற்ற வசதிகளைக் கேட்பது வரை அவர் கொடுக்கும் டார்ச்சர்களால் தயாரிப்பாளர்கள் தான் முழி பிதுங்குகிறார்களாம்.
அம்மா தான் ஸ்டோரி கேட்பார்.., ஷூட்டிங் ஸ்பாட்ல எனக்கு தனியா ஜிம் ஸ்பெஷாலிட்டி வேணும், என்னோட அசிஸ்டெண்ட், ஜிம் கோச் இவங்களுக்கு தனியா சம்பளம் தரணும், அதோட நான் கேட்கிற சம்பளத்தைத் தான் தரணும், அதுல ஒரு பைசா கூட குறையக் கூடாது என்று கண்டிஷன்களுக்கு மேல் கண்டிஷன்களைப் போட்டு திணறடிக்கிறாராம்.
இயக்குநர்கள் கேட்பதால் இந்த மாதிரி டார்ச்சர் பொண்ணுங்களையும் கமிட் பண்ண வேண்டியிருக்கே என்று புலம்பிக் கொண்டே செலவு செய்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.