இன்றுவரை சந்தியா என்று சொன்னால் ‘காதல்’ படம் மட்டுமே நினைவுக்கு வரும்.
அதன் பிறகு அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் பேர் சொல்ல ஒரு பிள்ளை என்பது போல ‘காதல்’ படம் மட்டுமே அவருடைய பெயரைச் சொல்ல பயன்படுகிறது.
கவர்ச்சி காட்டினாலும் எடுபடாது என்கிற நிலையில் நடித்த சில படங்களும் ஓடாததால் சீக்கிரத்திலேயே பட வாய்ப்புகள் இல்லாமல் மலையாளப் படங்களில் நடிக்கப் போனார்.
அப்போதும் கூட தமிழில் கவர்ச்சியாக நடிக்க வந்த வாய்ப்புகளை உதறித் தள்ளிய சந்தியா இன்றைக்கு ஒரு பாடலுக்கு குத்தாட்டம், காமெடி ஹீரோக்களுக்கு ஜோடி என தர லோக்கலாக இறங்கி வர ஆரம்பித்து விட்டார்.
சமீபத்தில் ரிலீசான கத்துக்குட்டி படத்தில் சந்தியாவின் குத்தாட்டம் பல இயக்குநர்களின் கண்களை உறுத்தியிருப்பதால் இனி தமிழில் அந்த ஏரியாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.
அதுக்காக இவ்ளோ தர லோக்கலாவா இறங்கிறது மேடம்!