சமத்து ஷாமிலியை ஏம்ப்பா சந்திக்கு இழுக்குறீங்க?

ண்ட்ரி கொடுத்தது தெலுங்கில் என்றாலும் முதல் படமே அட்டர் ப்ளாப்பாகி ‘நோ – எண்ட்ரி’ போர்டைப் போட்டதால் அப்செட்டான ஷாமிலி சில மாதங்கள் எந்தப் புதுப்படத்தையும் கமிட் செய்யாமல் மச்சான் அஜித் மாதிரியே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார்.

திடீரென்று விக்ரம் பிரபுவுடன் ஒரு படம், தனுஷுடன் ஒரு படம் என பிஸியாக ஆரம்பித்தவரைத் தேடி மலையாளப் பட வாய்ப்புகளும் தேடி வந்தன. அப்படி வந்த படம் தான் குஞ்சாக்கோபோபனுக்கு ஜோடியாக ‘வள்ளியும் தெட்டி புள்ளியும் தெட்டி’ என்ற படம்.

சூட்டோடு சூட்டாக வந்த படச் செய்தியோடு கூடவே இன்னொரு செய்தியும் சேர்ந்தே வந்தது.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் போதெல்லாம் ஷாமிலி அவருடன் அவரது அம்மா, நான்கு பெண் தோழிகளுடன் தான் ஆஜராகிறார். அவர்களுக்கும் சேர்த்து ஸ்பெஷல் ரூம், சாப்பாடு மற்றும் கைச்செலவுகள் என தயாரிப்பாளரை பர்ஷை பதம் பார்க்கிறார் என்று மலையாள மீடியாக்கள் எழுதித் தள்ளின.

பரவிய செய்தி தயாரிப்பாளர் பைசல் காதுகளை எட்டவும் ஒரே போடாக போட்டார் இப்படி?

”ஷாமிலி அப்படிப்பட்ட எந்த தொந்தரவும் எனக்குத் தரல. வந்தமா நடிச்சோமா? போனோமான்னு இருக்கு. அதைப்போய் இப்படி தப்பு தப்பா எழுதுறாங்களே..?”

அதானே சமத்து புள்ளையை ஏம்ப்பா இப்படி சந்திக்கு இழுக்குறீங்க…?

Actress ShamiliActress Shamili No TroubleValliyum Thetti Pulliyum Thetti
Comments (0)
Add Comment