‘காளி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாவது பெருமை! – சிலிர்க்கும் ஷில்பா மஞ்சுநாத்

விஜய் ஆண்டனியின் படம் என்றாலே படத்தின் டைட்டிலை அறிவித்தவுடன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடுகிறது.

அந்தளவுக்கு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவருடைய நடிப்பில், நாளை மறுநாள் மே 18-ம் தேதி ரிலீசாக உள்ள படம் தான் “காளி”.

விஜய் ஆண்டனி நடித்து, இசை அமைக்க, விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார்.

படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என விஜய் ஆண்டனிக்கு நான்கு ஜோடிகள். நான்கு ஜோடிகள் என்பதால் காதல் காட்சிகளில் காதல் ரசம் சொட்டுமே என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார். அது உண்மை தான் என்று சொல்லும் விதத்தில் அப்படத்தில் வரும் “அரும்பே” பாடல் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று உள்ளது.

அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்திருக்கிறார் நான்கு கதா நாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத். படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவரிடம் கேட்டபோது..

“காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ்த்திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் பட்டியல் என இந்த படத்தில் வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளன.

என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பார்வதி. என் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனா, அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம். நான் நவநாகரீகமான சூழ்நிலையில் வளர்ந்த பெண். பார்வதி கதாபாத்திரமோ முற்றிலும் மாறாக கிராமிய சூழ்நிலையில் வளரும் பெண். பல்வேறு பருவத்தை பிரதிபலிக்கும் பாத்திரம். மனோதத்துவ ரீதியாக மிக மிக பலம் பொருந்திய கதாபாத்திரம்.

“அரும்பே” பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்து உள்ளது. ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டு என்னை மேலும் உச்சத்தில் கொண்டு போவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன். தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா, கதாநாயகன் விஜய் ஆண்டனி, மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு நான் காலம் முழுக்க கடமைப்பட்டு உள்ளேன்” என்று சிலிர்த்தார் ஷில்பா.

actress shilpa manjunathKaalikaali movieShilpa Manjunath
Comments (0)
Add Comment