சன்னி லியோனுக்கு ரசிகர்கள் எங்கு அதிகம் தெரியுமா? – அவரே வெளியிட்ட ‘அதிர்ச்சி’ தகவல்

க்கக்சக்க ஆபாசப் படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற பிரபலமான நடிகை தான் சன்னி லியோன்.

தொடர்ந்து பல ஆபாசப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தற்போது அந்த ஏரியாவுக்கு குட்பை சொல்லிவிட்டு ஹிந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை முதன் முறையாக ஒரு நேரடி தமிழ் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்து விட்டு வந்திருக்கிறார் பிரபல கமர்ஷியல் பட இயக்குனர் வி சி வடிவுடையான்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத சன்னி லியோன் நடிக்கும் இப்படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் தன்னுடைய முதல் படமாக தயாரிக்கிறார். மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாம் இது.

தன்னுடைய அடையாளமாக இருக்கும் கிளாமர் ரூட்டில் இனி பயணிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கும் சன்னி லியோன் இந்த சரித்திர படத்தில் நடிக்க கத்தி சண்டை, குதிரையேற்றம் மற்றும் மற்ற சண்டைக் கலைகளையும் கற்று வருகிறார் சன்னி லியோன். இதற்காகவே ஆந்திராவில் இருந்து ஒரு சிறப்பு பயிற்சியாளர் மும்பைக்கு போய் சன்னி லியோனுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்த பிரமாண்ட படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் 70 நிமிட காட்சிகளில் கிராபிக்ஸ் தேவைப்படுகிறதாம். பாகுபலி, 2.0 படங்களில் பணி புரிந்த கம்பெனிகளை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.

“இந்த படத்துக்கு பிறகு என்னுடைய அடையாளம் நிச்சயம் மாறும். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும். இந்த மாதிரி கதைகளுக்காக சில வருடங்களாகவே காத்திருக்கிறேன். வி சி வடிவுடையான் இந்த கதையை எனக்கு சொன்ன போதிலிருந்தே நான் படத்துக்காக தயாராக ஆரம்பித்து விட்டேன். தென்னிந்தியாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தென்னிந்தியாவில் எனக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளாது, குறிப்பாக ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்” என்றார் நடிகை சன்னி லியோன்.

பிப்ரவரியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தற்போது படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் மற்றும் செட் அனைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.நாசர், நவதீப் ஆகியோருடன் பிரபல நடிகர் ஒருவரும் கதாநாயகன் ஆக நடிப்பார் என தெரிகிறது.

Actress Sunny LeoneSunny LeoneV C Vadivudayan Director V C Vadivudayan
Comments (0)
Add Comment