சுயசரிதை எழுதுகிறார் ஐஸ்வர்யா தனுஷ்..!

தற்போது படம் இயக்குவதில் இருந்து சற்று ஒய்வு எடுத்து வரும் ஐஸ்வர்யா தனுஷ், இந்த இடைவெளியை சுயசரிதை எழுத பயன்படுத்திக்கொண்டுள்ளார். “எனது வாழ்வின் பல்வேறு கட்டங்களில், நான் கண்ட வெற்றி தோல்விகள் பற்றிய புத்தகம் இது” என குறிப்பிட்டுள்ள ஐஸ்வர்யா,. முதலில் எளிதாக தோன்றினாலும் இதை எழுதுவது கடினமாக இருந்தது என்கிறார்.

சுயசரிதை பாணியில் இருந்தாலும் வீட்டிலும், சமுதாயத்திலும் பெண்களின் பங்கு பற்றி தனது புத்தகம் பேசும் என்று கூறியுள்ள ஐஸ்வர்யா, தனது வாழ்வில் நடந்த சம்பவங்கள், மற்ற சிந்தனைகள், நியாபகங்களை தொகுக்க நினைத்த போதுதான் இந்த புத்தகத்துக்கான யோசனை வந்தது எனக் கூறியுள்ளார். இந்த புத்தகத்தின் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஹார்ப்பர்காலின்ஸ் பதிப்பகத்தின் இந்தியப் பிரிவு வாங்கியுள்ளது. ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிச-12-ஆம் தேதி இப்புத்தகம் வெளியாக இருக்கிறதாம்..

ஐஸ்வர்யா தனுஷ்ரஜினி
Comments (0)
Add Comment