ஐஸ்வர்யா தனுஷ் பரத நாட்டியம் ஆடிப்பார்த்திருக்கீங்க… பாடல் பாடிக் கேட்டிருக்கீங்களா..?

ஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் சென்ற ஆண்டு மகளிர் தினத்தன்று ஐநா சபையில் பரத நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடினார்.

இதுவரை இப்படி ஒரு பரத நாட்டியத்தை பார்த்ததே இல்லை என்று கேலி, கிண்டல் செய்கிற அளவுக்கு அவருடைய பரத நாட்டியம் இருந்ததால் ரசிகர்கள் எல்லோரும் சமூக வலைத்தளங்களில் அவரை கழுவி கழுவி ஊற்றினார். கிண்டல், கேலி ஒருபக்கம் இருந்தாலும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண்மணி என்ற பெருமையை ஐஸ்வர்யா தனுஷ் பெற்றார்.

சென்ற ஆண்டு பரத நாட்டியம் ஆடி பரபரப்பை கிளப்பிய ஐஸ்வர்யா தனுஷ் இந்த ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். பெண்களின் பெருமையை கூறும் வகையிலான அமைந்த இந்த பாடலுக்கு இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைத்துள்ளார்.

சென்ற ஆண்டு ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் அதிகம் கிண்டல் செய்யப்பட்டது போல, அவர் பாடியிருக்கும் இந்தப் பாடலுக்கும் ரசிகர்களிடமிருந்து எந்த மாதிரியான ரியாக்‌ஷன்ஸ் வருகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

aiswarya dhanushbhavatharini
Comments (0)
Add Comment