தெறிக்க விட வரும் அஜித் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி!

‘வேதாளம்’ வந்தபோதும் வெளியில் ‘தல’ காட்டவில்லை, சென்னையில் வெள்ளம் வந்த போதும் வெளியில் ‘தல’ காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் அஜித் மீது தொடர்ந்து வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

எங்க ‘தல’ காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு ஆபரேஷன் செய்து கொண்டதால் ஓய்வெடுத்து வருகிறார் என்று உருகினார்கள் ரசிகர்கள்.

அந்த வகையில் அஜித்தின் இந்த ஓய்வு இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் போல் தெரிகிறது. அதோடு அடுத்த படத்தையும் சிறுத்தை சிவா தான் இயக்கப் போகிறார் என்கிற உறுதியான தகவல் வருகின்ற நிலையில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸும் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்கிற செய்தியும் கசிந்திருக்கிறது.

இந்த காம்போவில் படம் ரிலீசாகி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் மீண்டும் இந்தக் கூட்டணி வந்தால் அது தெறி கூட்டணியாகத்தான் இருக்கும் என்பதே நிஜம்.

அஜித் டபுள் ரோலில் நடிப்பது போல கதையை அமைத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் அகிரா படத்தை இயக்கிய கையோடு தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். இதனால் அஜித் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் வர இருக்கும் படம் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

ஆனால் அஜித்துக்காக காத்திருக்க விரும்பாமல் ஏ.ஆர்.முருகதாஸ் அவருக்காக எழுதிய கதையைத்தான் மகேஷ்பாபுவை நடிக்க வைக்கிறார் என்கிற ஷாக் நியூஸ் கசிந்தது.

அதை முற்றிலும் மறுத்திருக்கும் அவர் ”மகேஷ்பாபு நடிக்கும் படத்தின் கதை வேறு. அஜித் சாருக்காக நான் எழுதிய கதை வேறு. எத்தனை மாதங்கள் தாமதமானாலும் அஜித் சார் தான் அந்த கதையில் நடிப்பார்” என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.

A.R.MurugadossajithAjithkumar
Comments (0)
Add Comment