‘வேதாளம்’ தந்த வசூல் மழையில் ரொம்பவே திக்கு முக்காடிப் போன அஜித் அடுத்த படத்தையும் அப்படத்தின் இயக்குநர் சிவாவுக்கே கொடுத்து விட்டார்.
படப்பிடிப்பில் ஏற்பட்ட கடும் நெருக்கடிகளால் ”விட்டால் ஓடி விடுவேன்” என்கிற கண்டிஷனில் இருந்த சிவா, அஜித்தின் அன்புக் கட்டளையை தவிர்க்க முடியாமல் ஏ.கே 57 படத்தை கண்ணும் கருத்துமாக இயக்கி வருகிறார்.
கதைக்களத்துக்காக முதல் ஷெட்யூலுக்கு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் போய் ரிட்டர்ன் வந்தாலும் சில காட்சிகளை சென்னை, ஹைதராபாத் என குறிப்பிட்ட சில ஏரியாக்களில் படப்பிடிப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்காக சென்னையில் உள்ள ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் பிரம்மாண்டமான செட் போட்டு சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தார் சிவா.
எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
திடீரென்று சென்னை லொகேஷன் மட்டும் வேண்டவே வேண்டாம் என்று வம்படியாக மறுத்து விட்டாராம் அஜித்.
குறிப்பாக சென்னையில் உள்ள ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் பிரம்மாண்டமான செட் போட்டு சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தார் சிவா.அங்கே ரஜினியின் 2.0 படப்பிடிப்பு நடைபெறுவதால் எதற்கு டென்ஷன் என்று நினைத்த அஜித் அங்கே எடுக்கப்பட இருந்த அதே காட்சிகளை ஹைதராபாத்துக்கு மாற்றச் சொல்லி விட்டார்.
தல சொல்லி விட்டால் மறுக்க முடியுமா? மறு பேச்சு பேசாமல் ராமோஜிராவ் ப்லிம்சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.