‘தல’ தலைமையில் திருமணம்! : அப்புக்குட்டி செம ஹேப்பி

ஜித் தான் நடிக்கின்ற படங்களின் புரமோஷன்களிலும், திரையுலக விழாக்களில் மட்டும் தலை காட்டுவதில்லையே தவிர தனக்கு முக்கியமானவர்களின் வீட்டு விசேஷங்களில் அவ்வப்போது தலை காட்டித்தான் வருகிறார்.

குறிப்பாக அவர் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு சில நேரங்களில் இன்ப அதிர்ச்சியும் கொடுத்து வருகிறார்.

அஜித்தோடு ”வீரம்”, ”வேதாளம்” இப்போது ”ஏ.கே 57” ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிவபாலன் என்கிற அப்புக்குட்டி.

வீரம் படத்தில் நடித்தபோது அஜித்தோடு நட்பில் நெருக்கமானார் அப்புக்குட்டி. அப்புக்குட்டியின் எளிமையைப் பார்த்து பிடித்துப் போன அஜித் தொடர்ந்து அவருக்கு சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவரை வைத்து தனி போட்டோ ஷூட் ஒன்றையே நடத்தி அசத்தினார். அப்படியே அப்புக்குட்டி என்கிற பெயரை தூக்கிவிட்டு சிவபாலன் என்கிற சொந்தப்பெயரை வைக்கும்படியும் சொன்னார்.

அன்றிலிருந்து அஜித் வைத்ததே பெயர், அஜித் எடுத்ததே புகைப்படம் என்றிருக்கும் சிவபாலனுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி கொடுக்கத் தயாராகி வருகிறார் அஜித்.

ஆமாம், சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் புதிய வீடு கட்டி வரும் சிவபாலனுக்கு சொந்த ஊரில் பெண்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தனது திருமணம் அஜித் தலைமையில் தான் அஜித் தான் நடத்தி வைக்க வேண்டுமென்பது அப்புக்குட்டியின் ஆசை. தன் ஆசையை அஜித்திடம் தெரிவித்த அப்புக்குட்டிக்கு கண்டிப்பாக தலைமை தாங்குவதாக ஓ.கே சொல்லியிருக்கிறார் அஜித்.

விரைவில் அஜித் தலைமையில் சிவபாலனின் திருமணம் ‘ஜாம் ஜாம்’ என்று நடக்கப் போகிறது.

ajithAjithkumarAK 57AppukuttySivabalanThala 57
Comments (0)
Add Comment