தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் என்றாலே ரெகுலர் கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, மாஸ் ஹீரோக்களின் ரசிகர்களுக்கு அவர்கள் ஆஸ்த்தான ஹீரோக்கள் நடித்த படங்கள் ரிலீசாவது தான் பெருத்த கொண்டாட்டமாக இருக்கும்!
அதிலும் சமீபகாலமாக படங்கள் ரிலீசாகாவிட்டாலும் படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர், ட்ரெய்லர் என ஏதாவது ரிலீசானால் அதையே திருவிழாவாக கொண்டாடுவது அஜித் ரசிகர்களின் வேலையாகி விட்டது.
சென்ற ஆண்டு தீபாவளிக்கு வேதாளம் திரைப்படம் ரிலீசானதால் உற்சாகமான அஜித் ரசிகர்கள் தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாடி அமர்க்களம் செய்தார்கள்.
ஆனால் இந்த ஆண்டு அஜித் படம் எதுவும் வெளியாகவில்லை. சரி அஜித் நடித்து வரும் ஏ.கே 57 படத்தின் பர்ஸ்ட் லுக்காவது வெளியாகும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால் நொந்து போன அஜித் ரசிகர்கள் இந்த ஆண்டு தீபாவளியை துக்க தீபாவளியாக கொண்டாடினார்களாம். மதுரை ரசிகர்கள் இது எங்களுக்கு துக்க தீபாவளி என்று போஸ்டர் மதுரையின் ஒட்டுமொத்த பார்வையையும் தங்கள் பக்கம் திருப்பியிருக்கிறார்கள்.
அதுதான் தல…!