அஜித் கெட்டப் சேஞ்ச்! : ‘வீரம்’ ஸ்டைல் இல்லீங்க… இது ‘பில்லா’ ஸ்டைல்

சென்ற ஆண்டு ரிலீசான படங்களில் அதிக வசூலோடு முதலிடத்தில் இருந்த படம் அஜித்தின் வேதாளம். வீரம் சிவா இயக்கியிருந்த இந்தப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 57-வது படத்தையும் அவரே இயக்குகிறார். சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் தயாராகி வரும் இப்படத்தில் தான் அஜித்தின் கெட்டப்பை மாற்றப் போகிறாராம் சிவா.

‘வீரம்’ படத்தில் வெள்ளை சர்ட், வெள்ளை வேட்டி அணிந்து கலாச்சார காவலராக வந்த அஜித் அடுத்து வந்த ‘வேதாளம்’ படத்தில் ஒரு ஆட்டோ டிரைவராக மிடில் கிளாஸ் இளைஞனாக வந்தார்.

இதையடுத்து அஜித்தின் இந்தப்படத்தில் எப்படி வருவாரோ? என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

முந்தைய இரண்டு படங்களைப் போல் இல்லாமல் அஜித்தின் கெட்டப்பை இதில் மாற்றுகிறார் சிவா.

கெட்டப் மாறுகிறது என்றதும் ஏதோ விக்ரமைப் போல உடலை இளைத்து வரப்போகிறார் என்று தவறாக நினைக்க வேண்டாம். மீண்டும் கோட் -ஷூட் கெட்டப்பிலேயே வரப்போகிறாராம்.

இதன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெறுவதால் அதற்கேற்ப பில்லா பட பாணியில் இந்த கெட்டப் இருக்கும் என்கிறார்கள்.

அஜித் எப்படி வந்தாலும் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

ajithAjithkumarThala 57அஜித்அஜித்குமார்தல 57
Comments (0)
Add Comment