‘மெர்சல்’ படத்தை ரசித்துப் பார்த்த அஜித்! : என்ன சொன்னார் தெரியுமா?

தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகியிருக்கும் ‘மெர்சல்’ படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல், படத்தைப் பார்த்த திரையுலகப் பிரபலங்களும் மெர்சல் படம் எப்படி இருக்கிறது? என்பது பற்றி தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார்கள்.

குறிப்பாக மெர்சல் படத்தைப் பற்றி அவரது போட்டி ஹீரோவாகச் சொல்லப்படும் நடிகர் அஜித் சொல்லியிருக்கும் கருத்து தான் செம ஹாட்டு மச்சி ரகம்.

ஆமாம், விவேகம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது சண்டைக் காட்சிகளில் ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட அஜித் தற்போது தன் மனைவி ஷாலினியுடன் லண்டனில் ஓய்வெடுத்து வருகிறார்.

லண்டன் சென்றிருக்கும் அஜித் அங்குள்ள தியேட்டர் ஒன்றில் மெர்சல் படத்தை பார்த்து ரசித்திருக்கிறார்.

ரசித்ததோடு மட்டுமில்லாமல் ”மெர்சல் படத்தில் வருகிற அப்பா விஜய்யின் தளபதி கேரக்டர் என்னை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. அதே போல மேஜிக் நிபுணராக வரும் விஜய்யின் வெற்றி கேரக்டரும், அவர் செய்கிற சில மேஜிக் காட்சிகளும் என்னை கவர்ந்திருக்கிறது” என்று மனம் திறந்து பாராட்டியிருக்கிறாராம்.

மெர்சல் பற்றி அஜித் பாராட்டிய இந்தத் தகவலை அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் கசிய விட மெர்சலோடு அஜித்தின் இந்தக் கருத்தும் வைரலாகியிருக்கிறது.

ajithAjithkumarMersalMersal DiwaliMersal Movie ReviewMersal ReviewMovie ReviewThalaThalapathyvijay
Comments (0)
Add Comment