அஜித் ஏன் வெளியில் தலை காட்டுவதில்லை? : இதுதாங்க அந்த ரகசியம்

மெரிக்காவில் இருக்கிற அர்னால்டே ஊசிமுனை அளவு கூட சம்பந்தமில்லாத ‘ஐ’ படத்தின் புரமோஷனுக்காக சென்னைக்கு ப்ளைட்டைப் பிடித்து வந்து விட்டுப் போகிறார்.

தான் நடித்த ஒரு ஹிந்திப் படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷனுக்காக மும்பையிலிருந்து வரும் ஷாருக்கான் சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் வெட்கப்படாமல் குத்தாட்டம் போட்டு விட்டு படத்தை விளம்பரப்படுத்தி விட்டுப் போகிறார்.

இந்த பெருந்தன்மை தமிழ்சினிமா ஹீரோக்களுக்கு இருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாக வந்து விழும்.

தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை ரஜினி, கமல் விஜய் என பெரும்பாலான முன்னணி நடிகர்களும் தாங்கள் நடிக்கின்ற படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு கூடுமானவரை தலை காட்டி விட்டுப் போகிறார்கள். ஆனால் இந்த லிஸ்ட்டில் நடிகர் அஜித் மட்டும் இன்றுவரை முரண்டு பிடித்து வருகிறார்.

பில்லா, பில்லா 2, மங்காத்தா என இறுதியாக வந்த அரை டஜன் படங்களின் புரமோஷன்களுக்கு அஜித் வந்ததே இல்லை. மீடியாக்களும் அவரை நேரில் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது.

இயக்குநர் சொல்கிற கதை பிடித்தால் அந்தப் படத்தில் நடிப்பதோடு என் வேலை முடிந்து விட்டது என்கிற பாலிசியை இன்றுவரை தொடர்ந்து கடை பிடித்து வருகிறார் அஜித். இப்படி ஒரு விசித்திரமான பாலிசியை கடை பிடித்து வந்தாலும் எந்த தயாரிப்பாளரும் அவரை வைத்து படம் இயக்கத் தயங்குவதில்லை.

அதேபோல திரையுலகம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அஜித் வருவதில்லை. மீறி யாராவது கூப்பிட்டால் நான் பொது நிகழ்சிகளில் கலந்து கொள்வதில்லை என்ற ஒரு வார்த்தையை சொல்லி விலகி விடுகிறார்.

இப்படி ஒட்டுமொத்த திரையுலகமே விமர்சனம் செய்கிற அளவுக்கு நடந்து கொள்ளும் அஜித் ஏன் வெளியில் தலை காட்டுவதில்லை?

இதுகுறித்து சமீபத்தில் மீடியாவைச் சேர்ந்த ஒருவர் அஜித்தை எதேச்சையாக பார்த்த போதே கேட்டே விட்டாராம்.

அதற்கு அஜித் சொன்ன பதில் என்ன தெரியுமா?

”என்னை பொறுத்தவரை, நாம் வளரும் போது காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். அதேபோல் வளர்ந்த பிறகு வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

இதுல நான் இப்போ ரெண்டாவது ஸ்டேஜ்ல இருக்கேன். நாம வளர்ந்த இந்த நேரத்துல ஏதாவது நிகழ்ச்ச்சிகளுக்குன்னு போனா எதையாவது பேசி வைப்போம், அது பிரச்சனையைத் தரும். பைசாவுக்கு பிரயோசனமில்லாத அந்த மாதிரி பேச்சுக்களை தவிர்க்கத்தான் நான் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாதென்று முடிவெடுத்தேன்” என்றாராம் அஜித்.

கேட்க நல்லாத்தான் இருக்கு!

ajithAjithkumarAK57Thala 57
Comments (0)
Add Comment