அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ” அமைச்சர் “!

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் பட நிறுவனம் சார்பில் T ஜெயலட்சுமி கதை திரைக்கதை வசனம் எழுத, இயக்குநர் சலங்கை துரை நிர்வாக தயாரிப்பில் உருவான படம் ” அமைச்சர் ”

ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்த இந்த படத்தில் அவருடன் அக்ஷயா , கிகீ ,விஜயகுமார் மற்றும் பிர்லா போஸ் நடித்திருந்தனர்.

தேனிசைத் தென்றல் தேவா இசைக்கு மதன் கார்த்தி கபிலன் சினேகன் கருணாகரன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.

இயக்குனர் சலங்கை துரை மேற்பார்வையில் இந்த படம் உருவானது.

முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படம் தற்போது அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மேலும் ஓடிடி ப்ளஸ், ஜியோ டிவி தளங்களிலும் படம் வெளியாகி உள்ளது.

பரபரப்பாக இயங்கி வரும் இன்றைய தமிழக அரசியலில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றிருக்கும் நிலையில் இந்த அமைச்சர் படம் வெளியாகி இருப்பது மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Actor Jai AkashAmaichar moviedirector Salangai Durai.