இயக்குநர் விஜய்யை எந்த வேகத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டாரோ? அதே வேகத்தில் விவாகரத்துக்கும் அப்ளை செய்து விட்டார்.
இப்போது இருவருமே தங்கள் பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்கள். என்றாலும் விவாகரத்து செய்ய முடிவெடுத்த பிறகு தனுஷின் ”வட சென்னை” படத்தைத் தவிர அமலாபாலுக்கு தமிழில் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையவில்லை என்பதே கடந்த சில மாதங்களில் மீடியாக்களில் செய்திகளாக வந்தன.
அமலாபால் விஜய்யிடம் விவாகரத்து வாங்கியதே திருமணத்துக்குப் பிறகும் அவரைத் தேடி பட வாய்ப்புகள் வந்தது தான்.
அப்படியிருக்கும் போது மீடியாக்களில் அமலாபால் சும்மாவே இருக்கிறார் என்று செய்தி வந்தால் அவர் மனசு என்னாகும்? இதோ நான் இப்பவும் பிஸியாகத்தான் இருக்கிறேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் அமலாபால்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாணடமாக தயாரிக்கப்படும் “வட சென்னை” படத்தில் தனுஷ் ஜோடியாக முக்கிய வேடம், கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள “ஹெப்புலி” படத்தில் கதாநாயகி, தெலுங்கில் இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் முக்கிய வேடம் என தற்போது மிகவும் பிசியான கதாநாயகியாக ரவுண்டு வருகிறாராம் அமலாபால்.
அது மட்டுமா?
தமிழில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயன்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் பிரம்மாண்ட பொருட்செல்வில் உருவாகும் “திருட்டு பயலே 2” படத்தில் நாயகியும் இவர் தானாம்.
இனிமே யாராவது அமலாபால் சும்மாவே இருக்காருன்னு சொல்லாதீங்கப்பா…!!!