தனுஷுக்கு நெருக்கடி! : ‘வட சென்னை’யிலிருந்து வெளியேறுகிறார் அமலாபால்?

மலாபாலை பிரிவேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை என்று சில வாரங்களுக்கு முன்னால் நெஞ்சுருகி மீடியாக்களுக்கு அறிக்கை இ-ஒன்றை அனுப்பியிருந்தார் இயக்குநர் விஜய்.

அடுத்தடுத்து நகர்ந்த நாட்களில் இரண்டு பேரும் விவாகரத்துக்கு கோர்ட் படியேறி விவாகரத்தை உறுதி செய்த நிலையில், இன்னும் இந்த விவகாரத்தின் புகைச்சல் அடங்கியபாடில்லாமல் இருக்கிறது.

ஆமாம், இயக்குநர் விஜய் – அமலாபால் பிரிவுக்கு மிக முக்கிய காரணம் ‘வடசென்னை’ படம் தான் என்கிறார்கள்.

மூன்று பாகங்களாக தயாராகப் போகும் இந்தப்படத்தில் முதலில் சமந்தா தான் நாயகியாக கமிட்டாகியிருந்தார். விரைவிலேயே அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்யப் போகிறார் என்கிற செய்தி வெளியான நிலையில் அதற்காகவே அந்தப்படத்திலிருந்து விலகியதாக சொல்லப்பட்டது.

அதன்பிறகு தான் தான் தயாரித்த ‘அம்மா கணக்கு’ படத்தில் அமலாபாலின் நடிப்பைப் பார்த்து வியந்து அமலாபாலை இயக்குநர் வெற்றிமாறனிடம் ரெகமெண்ட் செய்தாராம் தனுஷ்.

இப்போது இந்த விவகாரத்தில் தனுஷுக்கு மனைவி ஐஸ்வர்யா தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அமலாபாலை ‘வட சென்னை’ படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று தனுஷுக்கு ஐஸ்வர்யா கட்டளை இட்டிருப்பதாகவும், மனைவி பேச்சை தட்ட முடியாத தனுஷ் நெருக்கடிக்கு ஆளாகி அமலாபாலை வட சென்னை படத்திலிருந்து நீக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

இன்னொரு நாயகியைத் தேடி வரும் தனுஷ் கமிட்டானதும் இந்த விஷயத்தை வெளிப்படையாக அறிவித்தாலும் அறிவிக்கலாம்.

Amala PaulDhanushSamanthavada chennai
Comments (0)
Add Comment