தர லோக்கலுக்கு இறங்கும் எமி! ; கலக்கத்தில் முன்னணி நடிகைகள்

டிக்க வந்து பல வருடங்கள் ஆகியும் இதுவரை ஒரு டஜன் படங்கள் தான் நடித்திருக்கிறார் எமி ஜாக்சன். தேடி வருகின்ற எல்லா படங்களையும் கமிட் செய்யாமல் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறதா? என்பதையும் கவனத்தில் கொண்டு தான் படங்களை கமிட் செய்கிறார். இதனாலேயே கைவசம் தெறி, ரஜினியின் 2.0 என குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே வைத்திருக்கிறார்.

என்னதான் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தாலும் காசை கொட்டிக் கொடுக்கும் தெலுங்கில் அவரது மார்க்கெட் கொஞ்சம் டல்லடிக்காத்தான் செய்கிறது.

ஆமாம், சென்ற ஆண்டு எமிக்கு தெலுங்கில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்தவர் டூபீஸ் கவர்ச்சி கூட காட்டத்தயார் என்று அறிவித்து இப்போது அல்லு அர்ஜீன் நடிக்கும் பட வாய்ப்பை வாங்கியிருக்கிறார்.

இதில் டைரக்டர் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் அதிகபட்ச கவர்ச்சி காட்டுவது என்று முடிவெடுத்திருக்கிறாராம். அப்படி காட்டுவதன் மூலம் சமந்தா, அனுஷ்கா, காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் பட வாய்ப்புகளை தன்வசம் இழுக்கலாம் என்று நினைக்கிறார்.

அவரின் இந்த அதிரடி முடிவைக் கேள்விப்பட்ட முன்னணி நடிகைகள் எமியுடன் எப்படி கவர்ச்சி காட்டுவதில் போட்டி போட முடியும் என்று கலக்கத்தில் இருக்கிறார்கள்.

2 Point 02 பாயிண்ட் ஓAmy JacksonTheriஎமி ஜாக்சன்தெறி
Comments (0)
Add Comment