‘2 பாயிண்ட் ஓ’ வும் ரிலீசாகல… பட வாய்ப்பும் வரல… – முட்டை முடிச்சுகளை கட்டிய எமி ஜாக்சன்!

‘மதராசப்பட்டிணம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் இங்கிலாந்தைச் சேந்த எமி ஜாக்சன்.

அறிமுகமான முதல் படத்தில் முழுக்க போர்த்திக் கொண்டு நடித்தாலும், மாடலிங் துறையில் கொடிகட்டிப் பறந்தவர் என்பதால் ஆடைத் துறப்புக்கு கொஞ்சமும் கூச்சப்படாதவர்.

இந்த ஒரு குவாலிட்டிக்காகவே தமிழில் விக்ரமுடன் ‘ஐ’ படத்தில் கமிட்டான உடனேயே தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன.

இதனால் தமிழ்ப்படங்களுக்கு குட்பை சொல்லி விட்டு பாலிவுட்டே போதும் என்று நடித்துக் கொண்டிருந்தார். இருந்தாலும் தொடர்ந்து அங்கு அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

மீண்டும் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘2 பாயிண்ட் ஒ’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்திருக்கிறார். அந்தப்படம் ரிலீசான பிறகு கணிசமாக சம்பளத்தை உயர்த்தி தொடர்ந்து தமிழில் ஒரு ரவுண்ட்டு வரலாம் என்றும் திட்டம் போட்டிருந்தார்.

ஆனால் ‘2 பாயிண்ட் ஓ’ படம் ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸ் தேதி முடிவாகாமல் தள்ளி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

‘2 பாயிண்ட் ஓ’ என்றைக்கு ரிலீசாவது? நாம் என்றைக்கு நடித்து சம்பாதிப்பது? என்று யோசித்தவர் பட வாய்ப்புகளே கிடைக்காததால் இந்திய சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்து மூட்டை முடிச்சுகளை கட்டி விட்டதாகத் தெரிகிறது.

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் ”நான் மொரக்கோ போகிறேன் திரும்ப வரமாட்டேன் டாட்டா” என்று தனது ரசிகர்களுக்கு வீடியோ மூலமாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் இந்திய சினிமாவுக்கு எமி ஜாக்சன் முழுக்கு போட்டு விட்டாரோ? என்று சந்தேகிக்கிறார்கள் ரசிகர்கள்.

2 point oAmy Jacksonindian cinematamil cinema
Comments (0)
Add Comment