“ஆனந்தம் விளையாடும் வீடு” உருக வைக்கும்!

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்க இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக திண்டுக்கல் மாநகரில் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது. 40 க்கும் மேற்பட்ட பிரபல நட்சத்திர கூட்டத்துடன், குடும்ப சித்திரமாக உருவாகி வரும் இப்படத்தை ‘மிக மிக அவசரம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ படங்களின் ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி ஒளிப்பதிவு செய்து வருகிறார். குடும்ப படங்களை தனித்துவமான ஒளியமைப்புடன், வடிவமைப்பதில் புகழ்பெற்ற அவர் இப்படம் அனைவர் நெஞ்சங்களையும் ஈர்க்கும் படைப்பாக இருக்குமன்று பாராட்டியுள்ளார்.

actor Gautham KarthikAnandham Vilayadum Veedu moviedirector Nandha Periyasamy