அதற்கு காரணம் ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம்.
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் இப்படத்தை வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றிய ராஜ்குமார் இயக்கியுள்ளார்.
சமகால தமிழக அரசியலை உச்சபட்ச நையாண்டி, கேலி, கிண்டல் செய்யும்விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், ராதாரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அரோல் கொரேலி படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பொறுப்பை விஷ்ணு ரங்கசாமியும், படத்தொகுப்பை ஜி.பி.வெங்கடேஷூம் ஏற்றுள்ளனர்.
“அண்ணனுக்கு ஜே” ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் தினேஷூக்கு சமீபத்தில் வெற்றிப்படங்கள் ஏதும் அமையாததால், அண்ணனுக்கு ஜே படத்தை பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்.