மு. மாறன் இயக்கத்தில், தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்ட ஆக்ஷன் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமான “அப்பா குட்டி” தீபாவளி வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 6, 2026 அன்று தீபாவளி சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். குடும்ப உணர்வுகள், விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் பொழுதுபோக்கு அம்சங்கள் எனத் தீபாவளி கொண்டாட்டத்திற்கான முழுமையான திரைப்பட அனுபவத்தை வழங்க இப்படம் தயாராகி வருகிறது.