தமிழ் மக்களின் உணர்வுகளுக்காக உண்ணாவிரதம் : போராட்டத்தை அறிவித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!

லகமே அதிசயிக்கத்தக்க வகையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் தொடங்கி உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் வாழும் நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மாணவர்கள், இளைஞர்கள் முன்னெடுத்த இந்த போராட்டத்துக்கு திரையுலகினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர் சங்கம் சார்பில் நாளை மெளன அறப்போராட்டம் நடைபெற உள்ள நிலையில் திரையுலகினர் சிலர் மெரினாவில் நடைபெறும் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

உணர்ச்சிமிக்க இந்தப் போராட்டத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் தனது ஆதரவை தெரிவித்ததோடு நாளை ஜனவரி 20-ம் தேதி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் தமிழகத்தின் உணர்வுகளுக்கு ஆதரவாக என்னுடைய போராட்டமாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் போராட்டம் எங்கு, எப்போது என்கிற தகவலை அவர் வெளியிடவில்லை.

A.R.RahmanJallikattuSave JallikattuSave Our Culture JALLIKATTU
Comments (0)
Add Comment