பத்து மணி நேரத்துல படம் ரெடி : உலக சாதனைக்கு தயாரான ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’!

மிழ்சினிமாவில் புதுமைகளுக்கு பஞ்சமே இருந்ததில்லை. அதிலும் அண்மைக்காலமாக வரும் இளம் இயக்குநர்கள் தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வண்ணம் புத்தம் புதிதாக ஏதோ ஒரு புதுமையை துணிந்து செய்கிறார்கள். அந்த இயக்குநர்கள் லிஸ்ட்டில் லேட்டஸ்ட் வரவு தான் இயக்குநர் எம்.எஸ்.செல்வா

இவர் நேற்று அக்டோபர் 21.10.2016 தேதியன்று ஒரு சாதனை நிகழ்த்தியிருக்கிறார். அதாவது பத்தே மணி நேரத்தில் ஒரு படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி சாதனை புரிந்திருக்கிறார். அதிலும் இன்று தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி சப்ஜெக்டான ஹாரர் காமெடி தான் அவருடைய படத்தின் களம்.

‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்கிற டைட்டிலோடு எடுக்கப்பட்ட இப்படத்தில் டாக்டர் பி.சரவணன் நாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே ‘அகிலன்’ என்ற படத்தில் நடித்தவர். அவருக்கு ஜோடியாக அனுகிருஷ்ணன் நடிக்க மேலும் சிங்கம்புலி, குமரேசன், இயக்குனர் எம்.எஸ்.செல்வா, கிரேன் மனோகர், நெல்லை சிவா, சுப்புராஜ், போண்டா மணி என ஒரு காமெடிப்பட்டாளமே நடித்திருக்கிறது.

ஒரு வீட்டுக்கு புதுமண தம்பதிகள் குடி வருகிறார்கள். கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லை. எனவே பேய் நம்பிக்கையை வரவழைத்து விரட்ட சில நண்பர்களை அமர்த்துகிறான். திகிலுடன் முதல் பாதி சென்றுகொண்டிருக்கும்போதே இன்னொரு புதுமண தம்பதி தங்க இடம் கேட்டு வருகிறார்கள்.

அவர்களை மேலே தங்க வைக்கிறான் கணவன். இந்த நேரத்தில் அங்கிருக்கும் பேய்கள் தான் செட் பண்ணிய போலி பேய்கள் இல்லை… உண்மையான பேய்கள் என்று தெரிய வருகிறது. அதன் பின் அந்த உண்மை பேய்களிடம் மாட்டிக்கொண்டு இரு தம்பதிகளும் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பதை இரண்டாம் பாதி முழுக்க வயிறு குலுங்க வைக்கும் காமெடியாக சொல்லவிருக்கிறது ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ படம்.

பத்து மணி நேரம் என்கிற மணி கணக்கை வைத்து காலை 7 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மாலை 5 மணிக்கு முடிவடைந்திருக்கிறது. இதற்காக கிட்டத்தட்ட இரண்டு மாதம் திட்டமிட்டு படப்பிடிப்பை 10 மணி நேரத்தில் நடத்தி முடித்து இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள் இயக்குனர் எம்.எஸ்.செல்வா தலைமையிலான படக்குழு.

இதற்கு முன்பு மலையாளத்தில் 11 மணி நேரத்தில் ஒரு படத்தை எடுத்து முடித்து சாதனை செய்தார்கள். அந்தச் சாதனையை முறியடிப்பதோடு, லிம்கா சாதனைப் பட்டியலிலும் இடம்பெறும் உத்வேகத்துடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் ஆறு கேமரா செட்டப், ஏற்கெனவே பயிற்சி தரப்பட்ட கலைஞர்கள் என முழுமையான திட்டமிடல் படத்தை நிச்சயம் சாதனைப் பட்டியலில் சேர்க்கும் என நம்பலாம். குறைந்த நேரத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் மூன்று பாடல்களும் உண்டு என்பது எக்ஸ்ட்ரா ஆச்சரியம்!

புதுமை ஜெயிக்கட்டும்!

arandavanukku irundathellam peiarandavanukku irundathellam pei movie news
Comments (0)
Add Comment