அர்ஜூன் ரெட்டி வருது, அப்போ ஆதித்ய வர்மா?

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜூன் ரெட்டி’. தமிழில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரிலீசாக இருக்கிறது.

இதற்கிடையே ‘அர்ஜூன் ரெட்டி’ என்ற பெயரில் ஏப்ரல் 26-ம் தேதி தமிழில் ஒரு படம் ரிலீசாக இருக்கிறது.

ஏற்கனவே தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’ தமிழில் ஆதித்ய வர்மாவாக ரீமேக்காகி கொண்டிருக்கும் போது இதென்ன புதுக்குழப்பம்? என்று விசாரித்தால் ஒரிஜினல் அர்ஜூன் ரெட்டிக்கும் இந்த டூப்ளிகேட் அர்ஜூன் ரெட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்கள்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா – பூஜா ஜாவேரி நடிப்பில் ‘துவாரகா’ என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படத்தை தான் தமிழில் ‘அர்ஜூன் ரெட்டி’ என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்களாம். ஒரிஜினல் அர்ஜூன் ரெட்டிக்கும் இந்த டூப்ளிகேட் அர்ஜூன் ரெட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்.

பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு பிரபல ஊடகவியலாளர் நெல்லை பாரதியின் பாடல்களை எழுதியிருக்கிறார்.

Arjun ReddyDwarakaMovie NewsPooja JhaveriVijay Devarakonda
Comments (0)
Add Comment