மாஃபியாவில் இணைந்த பிரியா பவானி சங்கர்

‘நரகாசுரன்’ படம் இன்னும் வெளியாகாத நிலையில் ‘மாஃபியா’ படத்தில் அருண் விஜய்யோடு கை கோர்த்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஒரு எளிய சம்பிரதாய விழாவுடன் தொடங்கியது.

தடம் படத்தை பார்த்த பிறகு தான் என் கதைக்கு அருண் விஜய் பொருத்தமாக இருப்பார் என்று நம்பினேன். நான் சொன்ன கதையில் எந்தவித மாற்றங்களும் சொல்லாமல் நடிக்க சம்மதம் சொன்னார். என்று படத்தைப் பற்றிச் சொல்லும் கார்த்திக் நரேன் படத்தை வெறும் 37 நாட்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

படத்தின் தலைப்பைக் கேட்டதும் அருண் விஜய் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்கிறாரா? என கேட்டதற்கு, “அவர் கேங்க்ஸ்டராக நடிக்கவில்லை, வடசென்னை பகுதியிலும் படத்தின் கதை இருக்கப் போவதில்லை. மாஃபியா வேறுபட்ட ஒரு களத்தை கொண்டிருக்கும் என்பதை மட்டும் தான் என்னால் இப்போதைக்கு சொல்ல முடியும்” என்றார்.

அருண் விஜய்யோடு, பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Arun VijayKarthick NarainLyca ProductionsMafiaMovie News
Comments (0)
Add Comment