3 வருட காதல் கசந்தது : அசின் திருமணம் கேன்சல்?

மிழ் கஜினியின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட்டுக்குப் போனார் அசின்.

படம் மெகா ஹிட்டானதால் அதன்பிறகு தேடி வந்த தமிழ், தெலுங்கு வாய்ப்புகளை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஹிந்திப் படங்களிலேயே கவனம் செலுத்தி வந்தார்.

போன இடத்தில் பட வாய்ப்புகளை மட்டுமா பிடித்தார்? தனது நெருங்கிய நண்பராகி விட்ட அக்‌ஷய்குமார் மூலம் அறிமுகமான மைக்ரோ மேக்ஸ் ஓனரின் காதல் வலையிலும் தான் விழுந்தார்.

அக்‌ஷய் குமார் நடித்த ‘கிலாடி 786’ என்ற பட சூட்டிங்கை பார்ப்பதற்காக ராகுல் சர்மா சென்றிருந்தார். அப்போது தான் அசின் ராகுல் சர்மாவுக்கு அறிமுகமானார்.

பின்னர் அக்‌ஷய்குமார் பங்கேற்கும் சினிமா விருந்துகளிலும் அசினும், ராகுல் சர்மாவும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.

இதில் காதலில் விழுந்து நெருக்கமானார்கள். அப்படித்தான் இரண்டு பேரும் ஒரு காரில் உட்கார்ந்து ‘மெய் மறந்து’ பேசிக் கொண்டிருந்ததை, பத்திரிகையாளர் ஒருவர் பார்த்து விட்டார். அவர் படம் எடுக்க முயற்சி செய்ய அசின் சண்டைக்கு போக அந்த சம்பவத்துக்குப்பிறகு அசின்–ராகுல் சர்மா காதல் வெளிச்சத்துக்கு வந்தது.

இருவருமே வேறு வழியில்லாமல் தங்கள் காதலை ஒப்புக்கொண்டதோடு வரும் நவம்பர் 26ம் தேதி எங்கள் திருமணம் டெல்லியில் நடைபெறும் என்று கூட்டாக அறிவித்தார்கள்.

ஆனால் அப்படி அவர்கள் சொன்ன தேதியை கணக்கு வைத்துப் பார்த்தால் அசின் இந்நேரத்துக்கு தனது காதல கணவருடன் ஹனிமூன் போயிருக்க வேண்டும்.

புத்தாண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையிலும் அசின் – ராகுல் சர்மா திருமணத்தைப் பற்றி இருவர் தரப்பிலும் எந்தப் பேச்சும் இல்லை.

ஆகவே இருவருமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருக்கலாம் என்று பாலிவுட் பதற ஆரம்பித்திருக்கிறது.

பொதுவாக தொழிலதிபர்களுக்கும், நடிகைகளுக்கும் கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க்-அவுட் ஆகி வருகிற நிலையில் அசின் திருமணம் தாமதமாகிக் கொண்டே போவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

என்னதாம்மா நடக்குது..?

AsinAsin - Rahul Sharma MarraigeRahul Sharma
Comments (0)
Add Comment