ஜீ5 தளத்தின்’அயலி’இணையத் தொடர் வெற்றிக்கொண்டாட்டம்!

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்து வருகிறது. இத்தளத்தில் சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான “அயலி” இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழ் ஓடிடி உலகில் புதிய சாதனை படைத்திருக்கும் இத்தொடர் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 4 வாரங்களைக் கடந்தும், பார்வையாளர்களின் விருப்பத் தேர்வாக முன்னணியில் உள்ளது. இந்த வெற்றியினை படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினர்.

இவ்விழாவினில்b இயக்குநர் முத்துக்குமார் கூறியதாவது,
”இந்த கதையை நம்பிய ஒட்டு மொத்த குழுவுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் முழு மனதோடு இதனை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இதில் நடித்துள்ள அத்தனை நடிகர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் சிறு சிறு காட்சிகளில் நடித்தாலும் முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து நடித்தனர். தயாரிப்பாளரான Zee5 குழு இதனை முழுதாக நம்பியதால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. இந்த தொடரில் வரும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட நுட்பமாகத் தேர்வு செய்து அதைப் பலரிடமும் கொண்டு சென்ற பத்திரிகை ஊடக நண்பர்களைப் பாராட்டி நன்றி கூறுகிறேன்” என்றார்.

Actress Abi NatchathraActress AnumolAyali web seriesDirector Muthu Kumar