‘பைரவா’வின் 5 மில்லியன் சாதனை! : கொண்டாடித் தீர்க்கும் விஜய் ரசிகர்கள்

சென்ற ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமான ஆண்டாக அமைந்து விட்டது. அஜித் நடித்த படம் ஒன்று கூட வெளிவராததால் அஜித் நடித்து வரும் AK 57 படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களையே பகிர்ந்து தல… தல… என்று ஆறுதல் பட்டுக் கொண்டார்கள்.

ஆனால் விஜய் தனது ரசிகர்களை அப்படி ஏமாற்றாமல் வருடத்துக்கு ஒரு படத்தையாவது கேரண்டியாக கொடுத்து விடுகிறார்.

அந்த வகையில் இந்த 2017ம் ஆண்டின் புத்தாண்டே விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகி விட்டது. ஆமாம், வருகிற பொங்கலுக்கு பைரவா படம் ரிலீசாவது உறுதியாகியிருப்பதால் விஜய் ரசிகர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

அது ஒருபுறமிருக்க புத்தாண்டையொட்டி வெளியிடப்பட்ட பைரவா படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பெருஞ்சாதனை செய்திருக்கிறது.

ட்ரெய்லர் ரிலீசான சுமார் 12 மணி நேரத்திலேயே சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த பைரவா டீஸர் தற்போது 5 மில்லியன் பார்வையாளர்களை வசீகரித்திருக்கிறது. விஜய்யின் இளமை மாறாத துடிப்பான நடிப்பும், டான்ஸும், ஸ்டண்ட்டும் ட்ரெய்லரில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறதாம். தென்னிந்தியப் படங்களில் வேறு எந்தப்படமும் செய்யாத சாதனையை பைரவா செய்திருப்பதால் விஜய் ரசிகர்கள் இந்த சாதனையை சமூகவலைத்தளங்களில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இந்த 5 மில்லியன் சாதனை இன்னும் சில தினங்களுக்குள்ளாகவே 10 மில்லியனை எட்டும் என்பதால் ரசிகர்கள் மட்டுமில்லாமல் படத்தை தயாரித்திருக்கும் விஜயா வாஹினி ஸ்டூடியோவும், வெளியிடும் ஸ்ரீ க்ரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியோடு ரிலீசுக்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

Bairavaabairavaa trailerKeerthi SureshSanthosh Narayananvijay
Comments (0)
Add Comment