தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ள பெத்லஹேம் குடும்ப யூனிட் திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்த கமல்ஹாசன், படக்குழுவினரின் ஒட்டுமொத்த பணியையும் வெகுவாக பாராட்டியதுடன், அவர்களின் முயற்சிகளுக்கும் படத்தின் சுவாரஸ்யமான திரை வடிவமைப்பிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தனது வாழ்த்துகளையும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் அவர் பகிர்ந்து கொண்டது படக்குழுவினருக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
இந்த சந்திப்பில் திரைப்படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி., நடிகர்கள் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில், கிரண் ஜோஸி, சங்கீத் பிரதாப் மற்றும் உன்னிமாயா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஃபியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களான அருண் நாராயணன் மற்றும் அனுப் குமார் ஆகியோரும் உடனிருந்தனர்