நடிக்க வந்த குறுகிற காலத்திலேயே பணக்காரர்கள் குழுமியிருக்கும் சென்னை போட் கிளப்பில் சொந்த பங்களா, விலை உயர்ந்த கார் என சொகுசாக வாழ்ந்து வருகிறார் நடிகை பிந்து மாதவி.
மாஸ் ஹீரோ என்றெல்லாம் பார்க்காமல் நல்ல கதையம்சமுள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்த பிந்து மாதவிக்கு இப்போது பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டது.
தனக்கென்று யாரையும் மேனேஜராக வைத்துக் கொள்ளாததே வாய்ப்பு குறைவதற்கு காரணம் என்கிறார்கள் இயக்குநர்கள்.
பிந்துவை தங்கள் படங்களில் நாயகியாக்க ஆசைப்படும் இயக்குநர்கள் அவரை தொடர்பு கொள்வதே குதிரைக் கொம்பாம். அதோடு யாரைப் பிடித்தால் பிந்துவை பிடிக்கலாம் என்கிற தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதும் தான் இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணமாம்.
இதனால் பிந்துவுக்காக காத்திருக்காமல் ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட வேறு சில நடிகைகளை தேடிப்போக ஆரம்பித்திருக்கிறார்கள்.