பட வாய்ப்புகள் குறைந்ததால் வெப் சீரியஸுக்கு தாவிய பாபிசிம்ஹா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் பிரபலமானவர் பாபி சிம்ஹா.

அந்தப் படத்தில் வில்லனாக நடித்து பெயரைப் பெற்றதோடு தேசிய விருதும் வாங்கினார். தொடர்ந்து உறுமீன், கோ 2 உட்பட ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.அப்படி ஹீரோவாக நடித்த படங்களில் எதுவும் பெரிதாக வெற்றியடையாததால் தற்போது ஹரி இயக்கத்தில் சாமி 2 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கைவசம் இந்த ஒரே ஒரு பட வாய்ப்பு மட்டுமே வைத்திருக்கும் பாபி சிம்ஹா புதிதாக ஆரம்பிக்க இருக்கும் வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார்.

இதில் அவருக்கு ஜோடியாக கோடிட்ட இடங்களை நிரப்புக உட்பட சில தமிழ்ப்படங்களில் நடித்த பார்வதி நாயர் நடிக்கிறார். ‘ஜிகர்தண்டா’ போல பயங்கரமான வில்லனாக நடிக்கிறாராம் பாபி சிம்ஹா. பிளாக் ஹியூமர் ஜானரில் தயாராகும் இந்த சீரியஸை. ‘ஜோக்கர்’, ‘அருவி’ படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஐஸ்வர்யா தனுஷ் பரத நாட்டியம் ஆடிப்பார்த்திருக்கீங்க… பாடல் பாடிக் கேட்டிருக்கீங்களா..?

actor bobby simhabobby simhaweb series
Comments (0)
Add Comment