‘போதை ஏறி புத்தி மாறி’ பெரிய திரைக்கு வரும் குறும்பட ஹீரோ!

போதையும், மயக்கமும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்று. அது பல மனிதர்களின் நம்பிக்கைகளையும், கற்பனைகளையும் திசை திருப்புகிறது. இந்த மாதிரி விஷயங்களை தீவிரமாக பேசும் படமாக தயாராகி வருகிறது ‘போதை ஏறி புத்தி மாறி’.

அறிமுக இயக்குனர் கே.ஆர். சந்துரு இயக்கும் இப்படம் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு திரில்லர் படமாம். அப்படிப்பட்ட இந்தப் படத்தில் குறும்படங்களில் நாயகனாக கலக்கிய தீரஜ் இந்த படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார்.

“தீரஜ் என்னுடைய ஒரு நல்ல நண்பர். நாங்கள் குறும்படங்களில் ஒன்றாக பணியாற்றினோம். இப்படத்தில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார், அதை சிறப்பாகவும் செய்தார். நாயகியாக பிரதைனி சர்வா என்ற மாடல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அனைத்து நடிகர்களும் இணையும் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்புகள் மிக விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

மிகவும் பிஸியாக இருந்தபோதும் என்னுடன் பணியாற்ற நேரத்தை ஒதுக்கிய ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சாருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த விஷயம் ரசிகர்களுடன் மிக நன்றாகப் பொருந்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று படத்தைப் பற்றி சிலாகித்தார் இயக்குனர் கே ஆர் சந்துரு.

Bodhai Yeri Budhi MaariDheerajMovie News
Comments (0)
Add Comment