‘பூமராங்’ படத்துக்கு புது ரிலீஸ் தேதி!

‘இவன் தந்திரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் கண்ணன் மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் தான் ‘பூமராங்’.

அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் வருகிற டிசம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்பு மொத்த படக்குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இதுகுறித்து இயக்குனர் கண்ணன் பேசுகையில், “டிசம்பர் 28ஆம் தேதி ‘பூமராங்’ படம் வெளியாக இருப்பதால் ஒட்டு மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஹீரோ அதர்வா இந்த படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் மிகவும் மெனக்கிட்டு வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.

இந்தப்படம் மிகச்சிறப்பாக உருவாக எனக்கு மொத்த குழுவும் பக்க பலமாக இருந்தது ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் முடிவில்லாத கடின உழைப்புக்கு இது புத்தாண்டு பரிசாக இருக்கும் என்று நான் உறுதியாக இருக்கிறேன்.

மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோரின் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும். சதீஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவருக்குமே சமமான முக்கியத்துவம் இருக்கும். வெறும் காமெடி மட்டுமல்லாமல், கதையில் முக்கிய பங்காகவும் இருப்பார்கள்” என்றார்.

படத்துக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ மூலம் புகழ் பெற்ற ரதன் இசையமைத்துள்ளார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் கண்ணன் தனது மசாலா பிக்ஸ் மூலம் படத்தை தயாரித்திருக்கிறார்.

முன்னதாக இந்தப் படத்துக்கு டிசம்பர் 21-ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதியில் சீதக்காதி, மாரி 2, அடங்க மறு உட்பட பல படங்கள் மோதுவதால் டிசம்பர் 28-ம் தேதி ரிலீசாகிறது.

Atharvaa MuraliBoomerangIndhujaMegha Akash
Comments (0)
Add Comment