50 மும்பை நடன அழகிகளுடன் படமாக்கப்பட்ட ‘கேப்மாரி’ பாடல் காட்சி!

யக்குனரும், நடிகருமான எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் ‘கேப்மாரி’ என்கிற C.M.

ஜெய்யின் 25-வது படமான இப்படத்தில் வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க, சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் தயாராகி வரும் இப்படத்திற்காக எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் விழிகளை விரிய வைக்கும் பிரமாண்ட அரங்கம் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

”என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா
என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா”

என்ற ஹரிசரண் பாடிய பாடலை 50 -க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர் புல்லாக படமாக்கப்பட்டது.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி வரும் எஸ். ஏ. சந்திரசேகரன் படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை விசிலடிக்க வைக்கும் என்றுகூறுகிறார். இவர் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கும் படம் இது.

C.M. CAPMAARIJaiMovie News
Comments (0)
Add Comment