அதற்காக அவரைத்தேடி டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் வருகிறது என்று எண்ணி விட வேண்டாம்.
அறிமுக இயக்குனர் அருண் சந்திரன் பாடல்கள் எழுதி இயக்கும் இந்த புதிய படத்தில் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்குத்தான் ‘செல்லப்பிள்ளை’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். அவரோடு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சூரி.
படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு தினேஷ் பொன்ராஜ், கலை துரைராஜ் மற்றும் அறிமுக இசையமைப்பாளர் தீசன் இசையமைக்கிறார்.
சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக இசக்கி துரையும் ஒயிட்லைன் புரொடக்ஷன் சார்பாக அன்பழகனும் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த மாதம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடைபெறவுள்ளது.